துப்பாக்கி சூடு நடத்தி வங்கிக்குள் நுழைந்த கொலையாளிகளை கதற வைத்த பேங்க் காவலாளி- டிஐஜி பாராட்டு

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் கனரா பேங்க் கிளை உள்ளது. இந்த கிளைக்குள் ஒருவர் வேகமாக பதறியபடி ஓடி வர சினிமாவில் வருவது போல் வேறு சிலர் கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் வங்கிக்குள் ஓடிவந்தவரை துரத்தி வந்துள்ளனர். ஓடிவந்தவர் மானாமதுரையில் கொலை வழக்கு ஒன்றில் சிறையிலிருந்து விட்டு ஜாமீனில் வெளியே வந்த தங்கமணி என்பவர், தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். இவர்கள் மரக்கடை அருகே சென்றபோது எதிரி கொலைக்கும்பல் துரத்தியுள்ளது. பதறியபடி ஓடிய தங்கமணி
 

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் கனரா பேங்க் கிளை உள்ளது. இந்த கிளைக்குள் ஒருவர் வேகமாக பதறியபடி ஓடி வர சினிமாவில் வருவது போல் வேறு சிலர் கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் வங்கிக்குள் ஓடிவந்தவரை துரத்தி வந்துள்ளனர்.

துப்பாக்கி சூடு நடத்தி வங்கிக்குள் நுழைந்த கொலையாளிகளை கதற வைத்த பேங்க் காவலாளி- டிஐஜி பாராட்டு

ஓடிவந்தவர் மானாமதுரையில் கொலை வழக்கு ஒன்றில் சிறையிலிருந்து விட்டு ஜாமீனில் வெளியே வந்த தங்கமணி என்பவர், தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

இவர்கள் மரக்கடை அருகே சென்றபோது எதிரி கொலைக்கும்பல் துரத்தியுள்ளது. பதறியபடி ஓடிய தங்கமணி கனரா பேங்க் கிளைக்குள் நுழைந்திருக்கிறார். உள்ளே அவரை துரத்திக்கொண்டு சிலர் நுழைந்திருக்கின்றனர்.

சட்டென்று சுதாரித்த பேங்க் காவலாளி

நேரு தான் வைத்திருந்த துப்பாக்கியால் கொலை கும்பலை நோக்கி சுட்டிருக்கிறார் கொலை கும்பலில் ஒருவனுக்கு முழங்காலுக்கு கீழே குண்டு பாய்ந்தது.

இதையடுத்து பதறிய அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. இந்நிலையில் தனது உயிரையும் பொருட்படுத்தாமல், துணிச்சலாக செயல்பட்டு துப்பாக்கிச் சூடு நடத்தி கொலை கும்பலை விரட்டியடித்த முன்னாள் ராணுவ வீரரும், வங்கியின் காவலாளியுமான செல்ல நேருவை, இராமநாதபுரம் மண்டல டிஐஜி ரூபேஷ்குமார் மீனா நேரில் அழைத்து பாராட்டினார்.

From around the web