’கடந்து வந்த பாதை’ டாஸ்க்கில் இதை சொல்லவில்லை: கதறியழுத ரேகா!

 

பிக்பாஸ் வீட்டிற்கு நேற்றும் இன்றும் எவிட்டான போட்டியாளர்கள் விருந்தினராக வந்து கொண்டிருக்கிறார்கள் என்பதும் வரும் வியாழன் வரை அவர்கள் அந்த வீட்டில்தான் இருப்பார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் நேற்று பிக் பாஸ் வீட்டிற்கு வந்த நடிகை ரேகா இன்று போட்டியாளர்கள் முன்னிலையில் பேசும் போது ’எனது தந்தையை பற்றி கடந்து வந்த பாதை டாஸ்க்கில் கூற வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் என்னால் கூற முடியவில்லை 

rekha cry

நான் நடிகையாக பிஸியாக இருந்தபோது என்னுடன் என்னுடைய அம்மாவும் துணைக்கு வந்தார். அப்போது உடல் நலம் இல்லாமல் இருந்த எனது அப்பாவை கவனிக்க ஆளில்லாமல் போனது. அதனால் அவர் இறந்துவிட்டார் 

இதனால் எனது தந்தையை என்னால் சரியாக கவனிக்க வில்லையே என்றும் என்னால் தான் எனது தந்தை இறந்தாரோ என்ற குற்ற உணர்ச்சி எனக்கு இப்பொழுது வரை உள்ளது என்று கதறி அழுதவாறு ரேகா கூறியது பரிதாபத்தை ஏற்படுத்தியது. இதனை அடுத்து போட்டியாளர்கள் அனைவரும் ரேகாவை ஆறுதல் படுத்தினர்


 

From around the web