ஒரு பேச்சுக்கு சொன்னா, உண்மையாகவே நரியா மாறிட்டாங்க: ரணகளத்திலும் காமெடி செய்த பாலாஜி 
 

 

பிக் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்கு கடந்த இரண்டு நாட்களாக கோழிப்பண்ணை டாஸ்க் கொடுக்கப்பட்டது என்பதும் இதில் கோழியாக இருவரும் மீதமுள்ளவர்கள் நரிகளாகவும் விளையாட வேண்டும் என்றும் கூறப்பட்டது 

இந்த டாஸ்க்கில் உள்ள விதிமுறைகள் போட்டியாளர்களுக்கு புரிந்ததா என்பதே தெரியவில்லை. ஆளாளுக்கு இஷ்டம்போல் விளையாடினார்கள். கோழியின் முட்டையை ஒரே நேரத்தில் ஒருவர் மட்டுமே தொட வேண்டும் என்ற விதி இருக்கும் நிலையில் ஒரே நேரத்தில் இரண்டுக்கும் மேற்பட்டவர்கள் தொட்டனர் என்பதும் அந்த விதிமீறல்களை கிட்டத்தட்ட அனைவருமே செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது 

bala archana

இதுகுறித்து கமல் முன் பஞ்சாயத்தை சனி ஞாயிறுகளில் ஹவுஸ்மேட்ஸ் வைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் கோழி மற்றும் நரிகள் பற்றி விளையாடிக் கொண்டிருந்த சக போட்டியாளர்கள் குறித்து பாலாஜி பேசிக்கொண்டிருந்தபோது ’பிக் பாஸ் ஒரு பேச்சுக்குத்தான் நரியாக மாற சொன்னார், ஆனால் இங்கே உண்மையாகவே எல்லாம் நரி மாதிரி பண்றாங்க என்று அவர் ரணகளத்திலும் ஒரு காமெடியை உதிர்த்தது செம காமெடியாக இருந்தது

மொத்தத்தில் பாலாஜி மிகவும் தந்திரத்துடன் காமெடியுடன் என்டர்டைன்மென்ட் உடனும் விளையாடி வருகிறார் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன

From around the web