எதிர்பார்த்தது கிடைக்கவில்லையே: மாஸ்டர் படக்குழு அதிருப்தி

தளபதி விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளதை அடுத்து இந்த படத்தின் சென்சார் சான்றிதழ் குறித்த தகவல்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
‘மாஸ்டர்’ திரைப்படத்துக்கு சென்சார் அதிகாரிகள் ’யுஏ’ சான்றிதழ் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக விஜய்யின் பெரும்பாலான படங்களுக்கு ‘யூ’ சான்றிதழ்தான் கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
கடந்த 2009ஆம் ஆண்டு விஜய் நடித்த வேட்டைக்காரன் படமும், கடந்த 2017ஆம் ஆண்டு விஜய் நடித்த மெர்சல் படமும் தான் கடந்த 11 ஆண்டுகளில் ’யுஏ’ சான்றிதழ் பெற்ற படம் என்பதும் மீதி அனைத்து படங்களும் யூ சான்றிதழ் பெற்ற படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ‘மாஸ்டர்’ திரைப்படத்துக்கு யு சான்றிதழ் கிடைக்கும் என்று படக்குழுவினர் எதிர்பார்த்த நிலையில் தற்போது யுஏ சான்றிதழ் கிடைத்துள்ளதால் எதிர்பார்த்தது கிடைக்கவில்லை என்ற அதிருப்தியில் படக்குழுவினர் இருப்பதாக கூறப்படுகிறது