இரங்கல் அறிக்கை கூட வெளியிடவில்லையா அஜித்? உண்மையில் நடந்தது என்ன?

 

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் நேற்று காலமானதை அடுத்து அவருக்கு ஒட்டுமொத்த திரையுலகமே அஞ்சலி செலுத்தி வந்தனர். குறிப்பாக தளபதி விஜய், பாரதிராஜா, அமீர், உள்பட பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் தல அஜித்தை திரையுலகில் அறிமுகப்படுத்த காரணமாக இருந்தவர்களில் ஒருவர் எஸ்பி பாலசுப்பிரமணியம் என்பதும் எஸ்பிபியின் மகன் சரண், அஜித்தின் நெருங்கிய நண்பர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. அப்படி இருந்தும் எஸ்பிபி மறைவிற்கு அஜித் ஒரு இரங்கல் அறிக்கை கூட வெளியிடவில்லை என்று ஒரு சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன 

ஆனால் உண்மையில் எஸ்பிபி சரண் அவர்களுக்கு அஜித் தொலைபேசி மூலம் தனது இரங்கலை தெரிவித்தார் என்றும் மற்றவர்களை போல புகைப்படத்திற்கு போஸ் கொடுப்பதற்காக நேரில் சென்று பரபரப்பை ஏற்படுத்த அவர் விரும்பவில்லை என்றும் அவரது தரப்பினர் தெரிவித்துள்ளனர் 

யாருக்கு இரங்கல் தெரிவிக்கும் தெரிவிக்க வேண்டுமோ அவர்களுக்கு சரியாக அஜித் இரங்கல் தெரிவித்து விட்டார் என்றும் அஜித் குறித்து தேவை இல்லாத செய்திகளை பரப்ப வேண்டாம் என்றும் அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கோரிக்கை விடுத்துள்ளனர்

From around the web