நீங்க சொல்றிங்களா? நாங்க சொல்லட்டுமா? மாஸ்டர் ஓடிடி ரிலீஸ் குறித்த பரபரப்பான டுவீட்

 

தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆகாது என்றும் முதலில் திரையரங்குகள் தான் ரிலீஸாகும் என்றும் படக்குழுவினர் தொடர்ச்சியாக கூறி வருகின்றனர். ஆனால் உண்மையில் இந்த படம் ஓடிடியில் ரிலீஸ் செய்ய பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தொகை பேரம் மட்டுமே இருப்பதாகவும் கூறப்படுகிறது 

இந்த நிலையில் ஓடிடியில் திரைப்படங்கள் ரிலீஸ் குறித்த தகவல்களை அவ்வப்போது தெரிவித்து வரும் நிறுவனம் ஒன்றின் டுவிட்டர் பக்கம் அமேசான் பிரைம் ஓடிடி நிறுவனத்திடம் கேள்வி ஒன்றை எழுப்பி உள்ளது 

உங்கள் அமேசானில் அடுத்ததாக வெளியாகும் தமிழ் திரைப்படத்தின் பெயரை நீங்கள் அறிவிக்கின்றார்களா? அல்லது நாங்கள் அறிவிக்கட்டுமா என்று கேட்டுள்ளது. இந்த கேள்வி மாஸ்டர் அப்டம் ஓடிடி ரிலீஸை மனதில் வைத்துதான் கேட்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது 

இந்த நிலையில் சற்றுமுன் வந்த தகவலின்படி மாஸ்டர் திரைப்படம் ஓடிடியில் ரிலீஸாவது உறுதி செய்யப்பட்டு விட்டதாக தெரிகிறது. எனவே மாஸ்டர் ஓடிடியில் ரிலீஸ் குறித்த தகவல் அதிகாரபூர்வ தகவல் எப்போது வேண்டுமானாலும் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 

அக்டோபர் அல்லது நவம்பரில் திரையரங்குகள் திறக்க அரசு அனுமதி கொடுத்தாலும் தயாரிப்பாளர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் இடையே பிரச்சனை நீண்டு கொண்டே செல்வதால் மாஸ்டர் திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web