கடல் நடுவே கட்டில் போட்டு படுத்தாரா வேதிகா? அசத்தலான புகைப்படம்!

 

தமிழ் திரையுலகின் நடிகைகளில் ஒருவரான வேதிகா கடந்த சில நாட்களுக்கு முன்னர் தீபாவளி கொண்டாட்டத்திற்காக மாலத்தீவு சென்றார் என்பது தெரிந்ததே

ஏற்கனவே காஜல் அகர்வால் தனது தேனிலவை கொண்டாட கணவருடன் மாலத்தீவு சென்று இருக்கும் நிலையில் தீபாவளி திருநாளை கொண்டாடுவதற்காக வேதிகா அழைத்து சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் அங்கு உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியிருக்கும் வேதிகா விதவிதமான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து வருகிறார். அந்த வகையில் சில நிமிடங்களுக்கு முன்னர் அவர் மாலத்தீவில் உள்ள கடல் நடுவே உள்ள ஒரு இடத்தில் வலையால் செய்யப்பட்ட கட்டிலில் படுத்து இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார் 

vedhika

இருபக்கமும் மரப்பாலம் போல் இருக்கும் அந்த இடத்தில் நடுவில் மட்டும் வலையால் கட்டில் போன்ற ஒரு அமைப்பு உள்ளது. அதில் அவர் கவர்ச்சியான உடையணிந்து படுத்து இருக்கும் வேதிகாவின் புகைப்படம் தற்போது அவரது இன்ஸ்டாகிராம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த புகைப்படத்திற்கு ஏராளமானோர் லைக்ஸ்களையும், கமெண்ட்டுகளையும் பதிவு செய்து வருகின்றனர்

From around the web