பேண்ட் போட மறந்துவிட்டாரா ரோபோசங்கர்? சக்ரா படப்பிடிப்பில் பரபரப்பு!

 

பிரபல காமெடி நடிகர் ரோபோ சங்கர் தற்போது விஷால் நடித்து வரும் சக்ரா என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். போலீஸ் கேரக்டரில் நடித்து வரும் அவரது காட்சியின் படப்பிடிப்பு சமீபத்தில் படமாக்கப்பட்டது 

இந்த படப்பிடிப்பில் அவருக்கு குளோசப் காட்சி மட்டுமே இருப்பதால் அவர் பேன்ட் அணியாமல் வெறும் பெர்முடாஸ் டவுசர் மட்டும் அணிந்து அந்த காட்சியில் நடித்துள்ளார் 

இதுகுறித்து அவர் கூறியபோது, ‘நீண்ட நாள் கழித்து படப்பிடிப்பு தொடங்கி உள்ளதால் தயாரிப்பு செலவை மிச்சப்படுத்த வேண்டும். இந்த குளோசப் காட்சிக்கு பேண்ட் வாங்கச் சென்றால் 500 அல்லது 1000 ரூபாய் செலவாகும். தயாரிப்பாளருக்கு பணத்தை மிச்சப்படுத்துவதற்காக பேண்ட் அணியாமல் உள்ளாடை மட்டும் அணிந்து நடித்து உள்ளதாக அவர் அந்த வீடியோவில் கூறியுள்ளார் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது

From around the web