சூர்யாவுக்கு ரெட்-கார்ட் போட்டார்களா விநியோகஸ்தர் சங்கத்தினர்? பரபரப்பு தகவல்

சூர்யா நடித்த சூரரைப்போற்று திரைப்படம் நேரடியாக ஓடிடியில் ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே. அக்டோபர் 30-ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸாக இருப்பதாகவும் இதனை அடுத்து அவருக்கு எதிராக திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் கடும் கண்டனம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற விநியோகஸ்தர் சங்க கூட்டத்தில் சூர்யாவுக்கு கடுமையான கண்டனம் தெரிவிக்கப்பட்டதாகவும் இனிமேல் அவரது படத்தை எந்த விநியோகஸ்தர்க்ளும் வாங்கப் போவதில்லை என்று முடிவு செய்ததாகவும் கூறப்படுகிறது 

ஆனால் விநியோகஸ்தர் சங்கத்தில் இருந்து வெளியான அறிக்கையில் இது குறித்து எந்த அறிவிப்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் சூர்யாவின் படத்தை நேற்று விநியோகஸ்தர் சங்க கூட்டத்தில் கலந்துகொண்ட யாருமே இதுவரை வாங்கியது இல்லை என்பதால் சூர்யாவின் அடுத்தடுத்த படங்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது

From around the web