இதையெல்லாம் சூர்யா செய்தாரா? அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை சுமத்தும் காயத்ரி ரகுராம்

 

நடிகர் சூர்யா சமீபத்தில் வெளியிட்ட நீட் குறித்த அறிக்கைக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது என்பதும் குறிப்பாக திரையுலகினர் அவரை கொண்டாடி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

அதேபோல் பாஜகவை சேர்ந்த அரசியல்வாதிகள் தவிர அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சூர்யாவின் நீட் குறித்த அறிக்கைக்கு ஏற்கனவே கண்டனம் தெரிவித்து இருந்த பாஜக பிரமுகர் காயத்ரி ரகுராம், தற்போது மேலும் ஒரு குற்றச்சாட்டை வைத்துள்ளார்

இந்தியன் 2’ படப்பிடிப்பின்போது 3 தொழிலாளர்கள் இறந்தது, மேலும் சண்டை பயிற்சியின் போது பல சண்டைப் பயிற்சியாளர்கள் விபத்தில் இறந்தது, லைட்மேன்கள் கீழே விழுந்து இறந்தது ஆகியவை குறித்து சூர்யா ஏதேனும் அறிக்கை விட்டாரா? அவர்களுக்கு ஏதேனும் நிதி உதவி செய்து காப்பாற்றினாரா? தனக்கு தேவையானவர்களுக்கு மட்டும் அவர் உதவி செய்கிறார் என்று காயத்ரி ரகுராம் குற்றம் சாட்டியுள்ளார் 

அதேபோல் பல நடிகைகள் தற்கொலை செய்து கொண்ட போதும், பல நடிகர்கள் வாய்ப்பு கிடைக்காமல் வறுமையில் இருக்கும் போதும் சூர்யா அவர்களை கண்டு கொள்ளவே இல்லை. தற்போது சுயநலத்திற்காக அவர் அறிக்கைகளை விட்டு விளம்பரம் தேடி வருகிறார். தேர்வு எழுதும் மாணவர்களை ஊக்குவிக்காமல், அவர்களை பயமுறுத்தும் வகையில் அறிக்கைகள் வெளியிட்டு வருகிறார் என்று காயத்ரி ரகுராம் தனது டுவிட்டரில் கூறியுள்ளார்

காயத்ரி ரகுராமனின் இந்த டுவீட்டுக்களுக்கு சூர்யா ரசிகர்கள் தரப்பிலிருந்து கண்டனங்கள் குவிந்து வருகிறது

From around the web