ஷிவானி அம்மாவுக்கு பதிலடியா? ஷிவானியை கண்டு கொள்ளாத பாலா அண்ணன்!

நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஷிவானியின் அம்மா வீட்டிற்குள் வந்து எந்த அளவுக்கு ஆவேசப்பட்டாரோ, அதற்கு நேரெதிராக பாலாஜியின் சகோதரர் கலகலப்பாக இருந்து விட்டு சென்றார். பாலாஜியிடம் மட்டுமின்றி அனைத்து போட்டியாளர்களிடமும் அவர் கலகலப்பாக பேசினார். பாலாஜியும் அவருடைய சகோதரரும் அடித்த கூத்துக்கள் சக போட்டியாளர்களுக்கு சுவராசியமாக இருந்தது
நேற்றைய நிகழ்ச்சியில் ஷிவானியின் அம்மா வீட்டிற்கு வந்த போது பாலாஜியை தவிர அனைத்து போட்டியாளர்களும் பேசினார். ஆனால் பாலாஜியிடம் முகம் கொடுத்துக் கூட பேசவில்லை என்பதும், அவர் முகத்தை கூட ஷிவானி அம்மா பார்க்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் பாலாஜி மிகவும் நொந்து போய் இருந்தார்
அதற்கு பதிலடியாக நேற்று பாலாஜியின் சகோதரர் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த போது ஷிவானியை கண்டுகொள்ளாமல் இருந்தார். கடைசிவரை அவர் ஷிவானியிடம் ஒரு ஹாய் கூட சொல்லவில்லை என்பதும் அதனால் ஷிவானியும் மிகவும் வருத்தத்தில் இருந்ததாகவும் தெரிகிறது
ஷிவானி அம்மா பாலாஜியையும், பாலாஜியின் சகோதரர் ஷிவானியையும் தவிர்த்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது