பிரபல இயக்குனரின் படத்தை நூலிழையில் மிஸ் செய்தாரா ஷிவானி நாராயணன்?

 

பழைய வண்ணாரப்பேட்டை என்ற படத்தை இயக்கிய இயக்குனர் மோகன் ஜி சமீபத்தில் இயக்கிய திரைப்படம் திரவுபதி. இந்த படத்தை அடுத்து அவர் ருத்ர தாண்டவம் என்ற படத்தை இயக்க இருக்கிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது 

இந்த படத்தின் நாயகியாக ஷிவானி நாராயணனனை இயக்குனர் தேர்வு செய்து வைத்திருந்த வைத்திருந்ததாகவும் ஆனால் தற்போது ஷிவானி பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருப்பதால் தற்போது தர்ஷா குப்தாவைவை தேர்வு செய்துவிட்டதாகவும் கூறப்படுகிறது 

ஏற்கனவே ஒரு சில சீரியல்களில் நடித்தவர் தர்ஷா குப்தா என்பதும் தற்போது நடைபெற்று வரும் ’குக் வித் கோமாளி 2’ என்ற நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் அவரும் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது 
எனவே பிரபல இயக்குனரின் படத்தை பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றதால் நூலிழையில் ஷிவானி மிஸ் செய்து விட்டதாக கூறப்படுகிறது

மேலும் திரெளபதி படத்தில் நாயகனாக நடித்த அஜித்தின் மைத்துனரான ரிச்சர்ட் தான் இந்த படத்தின் நாயகன் என்றும் அவருக்கு ஜோடியாகத்தான் தர்ஷா குப்தா நடிக்க உள்ளார் என்பதும் குறிப்பிட்த்தக்கது

From around the web