ஹனிமூனுக்காக ரூ.5 கோடி செலவு செய்தாரா காஜல்?

 

மும்பை தொழிலதிபர் கௌதம் என்பவரை சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட நடிகை காஜல் அகர்வால் தற்போது மாலத்தீவில் ஹனிமூன் கொண்டாடி வருகிறார் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் கடலுக்கு அடியில் 16 அடி ஆழத்தில் கட்டப்பட்டுள்ள கண்ணாடி அறையில் காஜல் மற்றும் அவரது கணவர் ஹனிமூன் கொண்டாடி வருகின்றனர். இந்த அறை உலகிலேயே மிகவும் காஸ்ட்லியான அறைகளில் ஒன்று என்றும் நாள் ஒன்றுக்கு இந்த அறையின் வாடகை மட்டும் 40 லட்சம் என்றும் கூறப்படுகிறது 

இந்த அறையை காஜல் அகர்வால்-கௌதம் தம்பதியினர் 12 நாட்களுக்கு வாடகைக்கு எடுத்துள்ளனர் என்பதும், கிட்டத்தட்ட 5 கோடி ரூபாய் இந்த அறைக்கு வாடகை மட்டுமே கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது 

kajal

மும்பையில் மிகப்பெரிய தொழிலதிபராக இருக்கும் கவுதமுக்கு இந்த பணம் ஒரு பெரிய விஷயம் இல்லை என்பதும் ஒரு படத்திற்கு ஒரு கோடி முதல் 2 கோடி வரை சம்பளம் வாங்கும் காஜல் அகர்வாலுக்கும் இந்த பணம் பெரிய விஷயம் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது

வாழ்க்கையில் ஒரே ஒரு முறை வரும் ஹனிமூனுக்காக இந்த அளவு காஸ்ட்லியாக அவர்கள் செலவு செய்ததில் எந்தவித தவறும் இல்லை என்றும் அவர்கள் உழைத்து சம்பாதித்த பணத்தை அவர்களுக்கு செலவு செய்ய உரிமை உள்ளது என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

From around the web