என்னாச்சு மீராமிதுனுக்கு? தனக்குத்தானே RIP டுவிட் போட்டுக் கொண்டாரா?

நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான மீராமிதுன் தனது ட்விட்டர் பக்கத்தில் திடீரென அவர் இறந்துவிட்டதாக டுவிட் ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 

நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான மீராமிதுன் தனது ட்விட்டர் பக்கத்தில் திடீரென அவர் இறந்துவிட்டதாக டுவிட் ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 

அந்த டுவிட்டில் மீராமிதுன் இறந்து விட்டதாகவும் அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் இந்த மரணம் குறித்து விசாரணையை தொடங்கி விட்டதாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது 

ஆனால் இந்த டுவிட்டை யாரும் கண்டு கொள்ளவில்லை என்பதும் எந்த ஊடகமும் இதனை ஒரு செய்தியாகக் கூட போடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது

மீராமிதுன் பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவு செய்திருக்கும் நிலையில் இந்த டுவிட்டையும் அவரே விளம்பரத்திற்காக பதிவு செய்திருப்பார் என்று பெரும்பாலான நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர் 

From around the web