வில்லனாக நடிக்க ஒப்புக்கொண்டாரா தளபதி விஜய்? பரபரப்பு தகவல் 

 

கடந்த சில ஆண்டுகளாக பிரபல நடிகர்கள் பலர் வில்லனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு வருகின்றனர் விஜய் சேதுபதி உள்பட ஒரு சில நடிகர்கள் வில்லனாக நடித்து வருகின்றனர் என்ற நிலையில் தமிழ் சினிமாவின் மாஸ் நடிகர்களில் ஒருவரான தளபதி விஜய்யும் தனது அடுத்த படத்தில் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன 

ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கும் ‘தளபதி 65 திரைப்படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடிக்க இருப்பதாகவும் அதில் ஒரு வேடம் வில்லன் என்றும் கூறப்படுகிறது 
அஜித் நடித்த ’வாலி’ திரைப்படம் போல் ’தளபதி 65’ திரைப்படத்தில் கதாநாயகன் வில்லன் ஆகிய இருவருமே விஜய் என்று கூறப்படுகிறதே 

ஏற்கனவே விஜய் ’அழகிய தமிழ் மகன்’ திரைப்படத்தில் கதாநாயகனாகவும் வில்லனாகவும் நடித்து இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது 

‘தளபதி 65’ படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி மாதம் தொடங்க இருப்பதாகவும் இதற்கான ஆரம்பகட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது

From around the web