பிக்பாஸ் வீட்டில் செல்போன் பயன்படுத்தினாரா சோம்? வைரலாகும் வீடியோ!

 

பிக்பாஸ் வீட்டில் சோம் செல்போன் பயன்படுத்தியதாக வைரலாகும் வீடியோ ஒன்றினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

செல்போன் உள்ளிட்ட எந்த தொடர்பும் இல்லாமல் பிக்பாஸ் வீட்டில் 100 நாட்கள் இருக்க வேண்டும் என்பதுதான் விதி. ஆனால் நேற்றைய எபிசோடில் கமல்ஹாசனுடன் அனிதா பேசிக்கொண்டிருக்கும்போது சோம், செல்போனை இயக்கிக் கொண்டிருப்பது போன்ற காட்சி இருந்தது 

som

இதனை தனியாக வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பிய நெட்டிசன்கள் பிக்பாஸ் வீட்டில் செல்போன் பயன்படுத்திய சோம்சேகரை யாரும் கண்டுகொள்ளாமல் இருந்தது ஏன் என்று கேள்வி எழுப்பினார்கள்

ஆனால் இதுகுறித்து பிக்பாஸ் நிர்வாகிகள் விளக்கம் அளித்தபோது சோம் தனது அருகில் உட்கார்ந்து இருந்த ரியோவின் மைக்கில் உள்ள பேட்டரியி சரி செய்தார் என்றும் அது செல்போன் கிடையாது என்றும் விளக்கமளித்தனர் 


இந்த விளக்கத்தை அடுத்து சொம் செல்போன் பயன்படுத்தவில்லை என்பது உறுதியானதும். இருப்பினும் நெட்டிசன்கள் திருப்தி அடையாமல் பேட்டரியை பயன்படுத்தும் வீடியோவை ஒளிபரப்புங்கள் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்

From around the web