குடிபோதையில் யாஷிகாவை மாட்டி விட்டவரா பாலாஜி முருகதாஸ்? கிழியும் முகமூடிகள் 

 

பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான பாலாஜி முருகதாஸ் தன்னுடைய தாய் தந்தையர் குடிகாரர்கள் என்றும் தான் சின்ன வயதில் சாப்பாடு கூட இல்லாமல் கஷ்டப்பட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இவரது கதையை கேட்டு அனைவரும் கண் கலங்கினார் 

ஆனால் அதே நேரத்தில் இரண்டே நாட்களில் அவரும் ஒரு குடிகாரன் என்றும் மது பாட்டிலுடன் கையில் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் சமீபத்தில் சனம் செட்டி தான் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றின் நிறுவனத்தை பாலாஜி முருகதாஸ் அவதூறாக பேசி விட்டதாக சண்டை போட்டார். இந்த சண்டை கடந்த சில நாட்களாக நீண்டுகொண்டே இருந்தது. இந்த நிலையில் பாலாஜி முருகதாஸ் டுபாக்கூர் நிறுவனம் என்று குறிப்பிட்ட அந்த நிறுவனத்தின் அதிபர் தற்போது பாலாஜி முருகதாசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். தனது நிறுவனம் குறித்து அவதூறாக பேசிய பாலாஜி முருகதாஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இல்லையேல் சட்டப்படி அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார் 

அதுமட்டுமின்றி கடந்த சீசனின் போட்டியாளர் யாஷிகாவும், பாலாஜியும் நெருங்கிய நண்பர்கள் என்றும் பாலாஜி முருகதாஸ் ஒரு முறை காரில் சென்று கொண்டிருந்த போது விபத்து ஒன்றை ஏற்படுத்தி விட்டார் என்றும் அதனால் டெலிவரி பாய் ஒருவர் காயமடைந்தார் என்றும் உடனே தனது தோழியான யாஷிகா ஆனந்த்து போன் செய்து இடம் உதவி கேட்டதாகவும், சம்பவ இடத்திற்கு யாஷிகா வந்தவுடன் பாலாஜி முருகதாஸ் எஸ்கேப் ஆகி விட்டதாகவும் இதனால் அந்த கார் விபத்தை யாஷிகாதான் நடத்தியதாகவும் பத்திரிகைகளில் செய்தி வெளியானது என்றும் அந்த நிறுவனத்தின் தலைவர் கூறியுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

From around the web