கமல் வறுத்தெடுப்பதை பார்த்தால் அர்ச்சனா தான் வெளியேறிவிட்டாரோ?


 

 

பிக்பாஸ் வீட்டில் அர்ச்சனா வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக வந்த சில நாட்களிலேயே நம்பர் கேமை தொடங்கி விட்டார் என்பது பார்வையாளர்களுக்கு புரிந்து விட்டது. ஆனால் சக போட்டியாளர்களுக்கு மிகவும் தாமதமாகத்தான் புரிந்தது 

குறிப்பாக தனக்கென 6 பேர் கொண்ட குழுவை வைத்துக்கொண்டு ஒவ்வொரு போட்டியாளராக அவர் தந்திரமாக வெளியேற்றியதை அனிதா, ஆரி, பாலாஜி ஆகியோர் தாமதமாக கண்டுபிடித்தனர். அதன் பின் தான் இந்த நம்பர் கேம் குறித்து அவர்கள் வெளிப்படையாக பேசத் தொடங்கினார்

archana

கமல்ஹாசன் கூட இந்த நம்பருக்கு குறித்து அவ்வப்போது அர்ச்சனாவிடம் சுட்டிக் காட்டி வந்தார். இந்த நிலையில் இன்று அவர் ஓபனாகவே அர்ச்சனாவிடம் நம்பர் கேம் குறித்த ஒரு கேள்வியை கேட்டார். அந்த கேள்வியை சரியாக புரிந்து கொள்ளாதது போல் அர்ச்சனா நடித்தாலும் அனிதா மிகச்சரியாக நம்பர் கேமை விளக்கினார். இதனை அடுத்து அர்ச்சனாவும் மழுப்பினார்

அப்போது கமல்ஹாசன் நீங்கள் மட்டும் தான் நம்பர் கேம் விளையாடுகிறீர்கள் என்று எண்ணவேண்டாம், மக்களும் நம்பர் கேம் விளையாட தொடங்கிவிட்டால் உங்களுடைய தனித்தன்மையை இழந்து விடுவீர்கள் என்று அவரை வறுத்து எடுத்தார்/

இந்த வாரம் அர்ச்சனா வெளியேற போவதாக கூறப்படும் நிலையில் அவர் வெளியேறும் போது அவர் செய்த தவறுகளை எல்லாம் சுட்டிக்காட்டி தான் கமலஹாசன் வெளியே அனுப்புவார் என்றும், எனவே இன்றும் நாளையும் அர்ச்சனாவுக்கு செம டோஸ் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

From around the web