எவிக்சனில் இருந்து அனிதா தப்பிச்சுட்டாரா? அப்ப வெளியேறுவது யார்?

 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அனிதா, சோம், ஆரி, சம்யுக்தா, ஆரி, பாலாஜி மற்றும் சுசி ஆகிய 7 பேர்கள் இந்த வாரம் நாமினேஷன் செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த வாரம் அனிதா வெளியேற அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது 

ஏற்கனவே கமலஹாசன் குறித்து கடந்த வாரம் சனம்ஷெட்டியுடன் அனிதா குறை கூறி கொண்டிருந்தார். அதுமட்டுமின்றி இடையில் நடந்த ஒரு டாஸ்க்கில் 15 பேர்களுக்கு 2 டாய்லட் தானா, ஹைஜீக்காக இல்லை என்று பிக்பாஸையும் குறை கூறினார் 

suchi

எனவே பிக்பாஸ் நிகழ்ச்சியையும் கமல்ஹாசனையும் குற்றம் கூறிய அனிதா வெளியேற அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது. ஆனால் நேற்று மாலை வந்த தகவலின் அடிப்படையில் குறைந்த வாக்குகளை சுசித்ரா பெற்றுள்ளதாகவும் எனவே அவர் வெளியேற அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது 

இதனை அடுத்து ரசிகர்கள் சுசித்ராவுக்கு அதிக வாக்குகளை அளித்து அவரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அது பலனளிக்கவில்லை என்றும் தற்போது குறைந்த வாக்குகளின் அடிப்படையில் இந்த வாரம் வெளியேறுவது சுசிதான் என்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன

கடந்த சில நாட்களாக சுசித்ரா திடீர் திடீரென்று கோபப்படுவதும், மனநிலை சரியில்லாதவர் போல் தனியாக பேசுவருவதையும் பார்க்கும்போது சுசித்ரா வெளியேறுவது சரிதான் என்றும் பார்வையாளர்கள் தெரிவித்து வருகின்றனர்

From around the web