சொந்த கதையை மறைத்தாரா நடிகர் ஆரி: நெட்டிசன்கள் பதில்

 

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் போட்டியாளர்கள் தங்களுடைய சொந்த கதையை கூறும் டாஸ்க் நேற்றுடன் முடிவடைந்தது 

இதில் அனைத்து போட்டியாளர்களும் உருக வைக்கும் அளவுக்கு தங்கள் சொந்த கதையை கூறினார்கள். இந்த நிலையில் நடிகர் ஆரி கூறிய கதையில் தன்னுடைய முதல் படத்தை மறைத்து விட்டதாகவும் அவருடைய முதல் படம் தாமிரா இயக்கிய ரெட்டைச்சுழி என்றும் ஆனால் அதனை அவர் சௌகரியமாக மறைத்து விட்டு தனக்கு தேவையான படத்தை மட்டும் அவர் கூறியதாகவும் சிலர் விமர்சனம் செய்து வருகின்றனர் 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சொந்த கதையை கூறுவதற்கு ஒவ்வொருவருக்கும் 5 நிமிடங்கள் மட்டுமே நேரம் கொடுக்கப்பட்டு இருந்தது. அந்த ஐந்து நிமிடத்தில் முக்கியமான சிலவற்றை மட்டுமே கூற முடியும். அது மட்டுமன்றி திட்டமிட்டு அவர்கள் பேசுவதில்லை.  ஒரு ஃப்லோவில் தங்களுக்கு ஞாபகம் இருப்பதை மட்டும் தான் பேச முடியும் 

ஆனால் தாங்கள் அனைத்து போட்டியாளர்களின் விபரங்களையும் தெரிந்த புத்திசாலிகள் என்று நினைத்துக் கொண்டு ஒருசிலர் போட்டியாளர்களை விமர்சனம் செய்வதாக என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

x

From around the web