தந்தையுடன் முதல்முதலாக இணைந்து நடிக்கும் துருவ் விக்ரம்: இயக்குனர் யார் தெரியுமா?

தமிழ் திரையுலகில் தந்தை மகன் ஒரே படத்தில் இணைந்து நடிப்பது புதிதல்ல. சிவாஜி கணேசன் – பிரபு, சிவகுமார் சூர்யா, சத்யராஜ்-சிபிராஜ், விஜயகுமார் – அருண்விஜய் ஆகியோர் பல படங்களில் இணைந்து நடித்துள்ளனர் என்பது தெரிந்ததே அந்த வகையில் தற்போது விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் ஒரே படத்தில் இணைந்து நடிக்க இருப்பதாக வெளிவந்த ஆச்சரியமான தகவல் வெளிவந்துள்ளது. பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் ஒரு படத்தில் நடிக்க உள்ளந் இலையில் இந்த படத்தில்
 
தந்தையுடன் முதல்முதலாக இணைந்து நடிக்கும் துருவ் விக்ரம்: இயக்குனர் யார் தெரியுமா?

தமிழ் திரையுலகில் தந்தை மகன் ஒரே படத்தில் இணைந்து நடிப்பது புதிதல்ல. சிவாஜி கணேசன் – பிரபு, சிவகுமார் சூர்யா, சத்யராஜ்-சிபிராஜ், விஜயகுமார் – அருண்விஜய் ஆகியோர் பல படங்களில் இணைந்து நடித்துள்ளனர் என்பது தெரிந்ததே

அந்த வகையில் தற்போது விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் ஒரே படத்தில் இணைந்து நடிக்க இருப்பதாக வெளிவந்த ஆச்சரியமான தகவல் வெளிவந்துள்ளது. பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் ஒரு படத்தில் நடிக்க உள்ளந் இலையில் இந்த படத்தில் விக்ரம் மகன் துருவ் விக்ரம் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் இவர்கள் இருவருக்கும் சம அளவிலான கேரக்டர்கள் என்றும் கூறப்படுகிறது

பிரபல தயாரிப்பளர் லலித் தயாரிக்கும் இந்தப் படம் லாக்டவுன் முடிந்தவுடன் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ’கோப்ரா’ என்ற படத்திலும், மணிரத்னம் இயக்கத்தில் ’பொன்னின் செல்வன்’ என்ற படத்திலும் விக்ரம் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு லாக்டவுன் முடிந்தவுடன் தொடங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது

துருவ் விக்ரம் நடித்த ‘ஆதித்ய வர்மா’ நல்ல வரவேற்பை பெற்றாலும், அவர் பல கதைகள் கேட்டும் திருப்தியில்லாததால் அடுத்த படத்தில் கமிட் ஆகாமல் இருந்தார். தற்போது தனது தந்தையுடன் ஒரு மாஸ் கேரக்டரில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web