விஜய் சேதுபதியுடன் ஒரு மீட்டிங் போட்ட துருவ்

நடிகர் விஜய் சேதுபதியை சந்தித்துள்ளார் துருவ் விக்ரம். 
 
விஜய் சேதுபதியுடன் ஒரு மீட்டிங் போட்ட துருவ்

சினிமாவில் பிரபலங்களின் வாரிசுகள் அறிமுகமாவது வழக்கம் தான்.

அப்படி தமிழ் சினிமாவில் அர்ஜுன் ரெட்டி என்கிற ஹிட் படத்தின் ரீமேக் மூலம் நாயகனாக களமிறங்கியவர் துருவ் விக்ரம்.  

முதலில் பாலா இயக்கத்தில் வர்மா என்கிற பெயரில் நடித்தார், பின் அந்த படம் சரியாக வரவில்லை. எனவே மீண்டும் அதே ரீமேக் கதையில் வேறொரு இயக்குனர் இயக்கி ஆதித்ய வர்மா என்கிற பெயரில் படம் வெளியானது.

துருவ் அடுத்து யாருடைய இயக்கத்தில் நடிப்பார் என்று பார்த்தால் விக்ரமின் 60வது படத்திலேயே துருவ் நடிக்கிறார்.  

என்ன கதாபாத்திரம் என்கிற தகவல் எதுவும் இதுவரை வெளிவரவில்லை.

இந்த நிலையில் தான் நடிகர் விஜய் சேதுபதியை சந்தித்துள்ளார் துருவ் விக்ரம். அப்போது அவருடன் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவிட்டு இவரை சந்திப்பது அழகான தருணம் எனவும் பதிவு செய்துள்ளார்.

From around the web