ஏற்றுமதி செய்யும் விவசாயி ஆக மாறிய தோனி: வைரல் புகைப்படங்கள்!

 

கிரிக்கெட் ரசிகர்கள் தல என்று அன்புடன் அழைக்கப்படும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான தோனி சமீபத்தில் அனைத்து வகை போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் என்பது தெரிந்ததே 

ஓய்வுக்குப் பின் அவர் தற்போது தனது சொந்த நிலத்தில் விவசாயம் செய்து வருவதாக கூறப்பட்டது. இந்த நிலையில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின் விவசாயம் செய்த எம்எஸ் தோனி, தனது நிலத்தில் அறுவடையான காய்கறிகளை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்வதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

farmer dhoni

குறிப்பாக துபாய் நாட்டுக்கு தோனியின் நிலத்தில் விளைந்த காய்கறிகள் ஏற்றுமதி செய்யும் பணிகளில் ஜார்க்கண்ட் அரசு தீவிரம் காட்டி வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. அப்பாவி விவசாயிகள் ஆயிரக்கணக்கில் டெல்லியில் போராடிக் கொண்டிருக்கும் நிலையில் தோனி போன்ற பணக்கார விவசாயிகளுக்கு ஜார்க்கண்ட் அரசு ஏற்றுமதிக்கு உதவி செய்து வைத்திருப்பது ஒரு பக்கம் சர்ச்சையை ஏற்படுத்தினாலும், ஓய்வுக்குப் பின்  விளம்பரம், திரைப்படங்களில் நடிக்காமல், அரசியலில் ஈடுபடாமல் விவசாயி ஆக மாறி மாஸ் காட்டும் தோனிக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்து வருகிறது

From around the web