தனுஷின் ‘கர்ணன்’ திரைப்படம்: டுவிட்டர் விமர்சனம்

 
தனுஷின் ‘கர்ணன்’ திரைப்படம்: டுவிட்டர் விமர்சனம்

தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் உருவான ‘கர்ணன்’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. கொரனோ வைரஸ் கட்டுப்பாடு காரணமாக திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே அனுமதி என்று தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் வெளியாகும் முதல் படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ‘கர்ணன்’ திரைப்படம் இன்று காலை சிறப்பு காட்சிகள் வெளியான நிலையில் அந்த காட்சியை பார்த்த ரசிகர்கள் தங்களது கருத்தை ட்விட்டரில் பதிவு செய்துள்ளனர்.

‘கர்ணன்’ படத்தில் தனுஷ் மாஸாக நடித்து உள்ளார் என்றும் இன்டர்வல் பிளாக் மிகவும் சிறப்பாக இருப்பதாகவும் இந்த படம் நிச்சயம் வெற்றிபெறும் என்றும் குறிப்பிட்டுள்ளனர் 

karnan

தனுஷ் இந்த கேரக்டராகவே மாறி உள்ளார் என்றும் அவரது ஒவ்வொரு கோபமும் அவரது கண்ணில் தெரியும் என்றும் அவரது உடம்பு முழுவதும் நடிக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளனர் 

மாரி செல்வராஜ் ஒவ்வொரு காட்சியையும் ரசித்து ரசித்து இயக்கி உள்ளார் என்றும் சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் இந்த படத்திற்கு மிகப்பெரிய பலம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்

ஆனால் அதே நேரத்தில் ஒரு சிலர் இந்த படம் ஜாதியை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது என்றும் திரவுபதி படத்திற்கு போட்டியாக உருவாக்கப்பட்டது போல் இந்த படம் இருப்பதாக கருத்து தெரிவித்துள்ளனர்

மொத்தத்தில் பலவிதமான பாசிடிவ் மற்றும் ஒருசில நெகட்டிவ் விமர்சனங்கள் இந்த படம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web