மூன்றாவது முறையாக தனுஷ் தேசிய விருது வாங்குவார்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் கர்ணன்.

 

வரும் ஏப்ரல் 9-ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தை கலைப்புலி S தாணு தயாரிக்க சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது. இதில் பேசிய இயக்குநர் மாரி செல்வராஜ் தமது தயாரிப்பாளருக்கும் ஹீரோவுக்கும் இசை அமைப்பாளருக்கும் நன்றி சொன்னதுடன், அனைவரும் தான் நினைத்தவற்றை முழு சுதந்திரத்துடன் எடுக்க அனுமதித்ததாக நெகிழ்ந்தார்.

முன்னதாக பேசிய தயாரிப்பாளர் தாணு, மாரி செல்வராஜ் ஒரு காவியத்தை எடுத்திருப்பதாகவும், பாலுமகேந்திரா போன்ற இயக்குனர்கள் இல்லையே என்ற குறையை தனக்கு மாரி  செல்வராஜ் போக்கி இருப்பதாகவும் பேசினார். மேலும் டைரக்டர் என்ன நினைக்கிறாரோ அதை தனுஷ் நடித்துக் கொடுத்ததாகவும் குறிப்பிட்டதுடன்,  நட்டி நடராஜ் எங்கள் குடும்பத்துப் பிள்ளை என்று பேசியிருந்தார்.

தனுஷுடன் யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்துக்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் விழாவில் நடிகரும் பிரபல ஒளிப்பதிவாளருமான நட்டி நட்ராஜ் பேசியிருந்தார். அவர் பேசும்போது, “இந்த படத்தில் வாய்ப்பளித்த கலைப்புலி S தாணு அவர்களுக்கும் தனுஷுக்கும், மாரிசெல்வராஜ் அவர்களுக்கும் நன்றி. இந்த படம் நம் மனம் சொல்வது போல் அமையும். இப்படத்திற்காக மூன்றாவது முறையாக தனுஷ் அவர்கள் தேசிய விருது வாங்குவார். மிகப்பெரிய பொருட்செலவில் இப்படத்தை தயாரித்துள்ளார் தாணு சார்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

From around the web