ஜகமே தந்திரம் குறித்து முதன் முதலாக மனம் திறந்த தனுஷ்

ரசிகர்கள் அனைவரையும் போலவே நானும் ஜகமே தந்திரத்தின் திரையரங்கு வெளியீட்டை எதிர்பார்த்து கொண்டு இருக்கிறேன்" என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
 

நடிகர் தனுஷ் தற்போது இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் D43 படத்தில் நடித்து வருகிறார், இப்படத்தை முடித்து விட்டு எந்த இயக்குனருடன் இணைவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

மேலும் தனுஷ் நடித்து முடித்துள்ள திரைப்படங்கள் ஜகமே தந்திரம் மற்றும் கர்ணன் திரைப்படங்கள். இந்த இரண்டு திரைப்படங்களும் வெளியாக தயாராக உள்ளது. இதில் கர்ணன் திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது, ஆனால் ஜகமே தந்திரம் திரைப்படம் OTT-யில் வெளியாகும் என பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தற்போது தனுஷ் "தியேட்டர் உரிமையாளர்கள், கண்காட்சியாளர்கள், விநியோகஸ்தர்கள், சினிமா பிரியர்கள் மற்றும் எனது ரசிகர்கள் அனைவரையும் போலவே நானும் ஜகமே தந்திரத்தின் திரையரங்கு வெளியீட்டை எதிர்பார்த்து கொண்டு இருக்கிறேன்" என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.


 

From around the web