கிரிக்கெட் போட்டியை காண தனுஷ் குடும்பத்துடன் வருகை

ஐபிஎல் சீசன் போட்டிகள் நடந்து வருகிறது. நேற்று சென்னை சூப்பர் கிங்சுக்கும் கொல்கத்தா நைட் ரைடர்சுக்கும் இடையிலான போட்டி நடந்தது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி வீரர்கள் கிறிஸ் லின் 0 ரன், சுனில் நரின் 6 ரன், தினேஷ் கார்த்திக் 19 ரன், ராபி உத்தப்பா 11 ரன், சுப்மான் கில் 9 ரன், நிதிஷ் ராணா 0 ரன், பியூஸ்
 

ஐபிஎல் சீசன் போட்டிகள் நடந்து வருகிறது. நேற்று சென்னை சூப்பர் கிங்சுக்கும் கொல்கத்தா நைட் ரைடர்சுக்கும் இடையிலான போட்டி நடந்தது.

கிரிக்கெட் போட்டியை காண தனுஷ் குடும்பத்துடன் வருகை

இதில் டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி வீரர்கள் கிறிஸ் லின் 0 ரன், சுனில் நரின் 6 ரன், தினேஷ் கார்த்திக் 19 ரன், ராபி உத்தப்பா 11 ரன், சுப்மான் கில் 9 ரன், நிதிஷ் ராணா 0 ரன், பியூஸ் சாவ்லா 8 ரன், குல்தீப் யாதவ் 0 ரன், பிரசித் கிருஷ்ணா 0 ரன், என அடுத்தடுத்து சொற்ப ரன்களில் தங்களது விக்கெட்டுகளை  இழந்தனர். 

இறுதியில் கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 108 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக ஆந்த்ரே ரஸ்செல் 50 ரன்கள் எடுத்தார்.
சென்னை அணியில் சிறப்பாக பந்து வீசிய தீபக் சாஹர் 3 விக்கெட், ஹர்பஜன்சிங் 2 விக்கெட்,  இம்ரான் தாஹிர் 2 விக்கெட், ரவீந்திர ஜடேஜா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இறுதியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்றது. இந்த போட்டியை காண நடிகர் சதீஷ் உட்பட பலரும் வந்திருந்தனர். தனுசும் தன்னுடைய மகனுடன் வந்திருந்தார். தனுஷ் மகனுடன் போட்டியை காண வரும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

From around the web