5 மாதங்களில் 3 படங்களை ரிலீஸ் செய்யும் தனுஷ்: என்னென்ன படங்கள் தெரியுமா?

 

தனுஷ் தான் நடித்து முடித்துள்ள மூன்று படங்களை அடுத்தடுத்து ஐந்து மாதங்களில் ரிலீஸ் செய்ய உள்ளது அவரது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக உள்ளது

தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் தயாரித்த கர்ணன் திரைப்படம் ஏப்ரல் 9ஆம் தேதி தமிழ்ப் புத்தாண்டு விருந்தாக ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே 

இந்த நிலையில் சற்று முன் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் நடித்து முடித்துள்ள பாலிவுட் திரைப்படமான அட்ராங்கி ரே’ என்ற திரைப்படம் ஆகஸ்ட் 6ஆம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளார் 

atrange re

இதனை இந்த நிலையில் தனுஷ் நடித்து முடித்துள்ள இன்னொரு திரைப்படமான ஜகமே தந்திரம் என்ற திரைப்படம் வரும் மே அல்லது ஜூன் மாதம் ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

எனவே ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான ஐந்து மாதங்களில் அவர் அடுத்தடுத்து தனது மூன்று படங்களை ரிலீஸ் செய்ய உள்ளது தனுஷின் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது


 

From around the web