உங்கள் அன்பால் திக்குமுக்காடி போய்விட்டேன்: தனுஷ் அறிக்கை

கடந்த பல ஆண்டுகளாக அஜித், விஜய் உள்பட மாஸ் நடிகர்களின் பிறந்தநாள் கொண்டாட்டங்களை அவரவர் ரசிகர்கள் மிகவும் பிரம்மாண்டமாக கொண்டாடி வருகின்றனர் என்பது தெரிந்ததே குறிப்பாக சமூக வலைதளங்களில் காமன் டிபி போஸ்டர்களை வெளியீட்டு பிறந்தநாள் குறித்த ஹேஷ்டேக்குகளை தெறிக்க விடுவது வழக்கமாக உள்ளது இந்த நிலையில் நேற்று முன்தினம் நடிகர் தனுஷின் பிறந்த நாள் கொண்டாடப்பட்ட நிலையில் அஜீத் விஜய் போன்ற நடிகர்களுக்கு இணையாக அவரது ரசிகர்கள் தனுஷ் பிறந்த நாளை கொண்டாடினார்கள் இந்த பிறந்தநாளில்
 
உங்கள் அன்பால் திக்குமுக்காடி போய்விட்டேன்: தனுஷ் அறிக்கை

கடந்த பல ஆண்டுகளாக அஜித், விஜய் உள்பட மாஸ் நடிகர்களின் பிறந்தநாள் கொண்டாட்டங்களை அவரவர் ரசிகர்கள் மிகவும் பிரம்மாண்டமாக கொண்டாடி வருகின்றனர் என்பது தெரிந்ததே

குறிப்பாக சமூக வலைதளங்களில் காமன் டிபி போஸ்டர்களை வெளியீட்டு பிறந்தநாள் குறித்த ஹேஷ்டேக்குகளை தெறிக்க விடுவது வழக்கமாக உள்ளது

இந்த நிலையில் நேற்று முன்தினம் நடிகர் தனுஷின் பிறந்த நாள் கொண்டாடப்பட்ட நிலையில் அஜீத் விஜய் போன்ற நடிகர்களுக்கு இணையாக அவரது ரசிகர்கள் தனுஷ் பிறந்த நாளை கொண்டாடினார்கள்

இந்த பிறந்தநாளில் ரசிகர்களின் அன்பை பார்த்து திக்குமுக்காடிப் போன தனுஷ் நன்றி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளதாவது:

என்‌ ரசிகர்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை… உங்கள்‌ அன்பால்‌ திக்குமுக்காடிப்‌ போய்விட்டேன்‌.

அனைத்து காமன் டிபிக்கள்‌, மாஷ் அப்க்கள்‌, வீடியோக்கள்‌, மூன்று மாதங்களாக நீங்கள்‌ செய்து வந்த கவுண்ட் டவுன் டிசைன்கள்‌ அனைத்தையுமே என்னால்‌ முடிந்தவரை பார்த்தேன்‌, ரசித்தேன்‌, மகிழ்ந்தேன்‌.
மிக்க மிக்க நன்றி .

அதையும்‌ தாண்டி நீங்கள்‌ செய்த அத்தனை நற்பணிகளையும்‌ கண்டு நெகிழ்ந்த நான்‌, உங்களால்‌ கர்வம்‌ கொள்கிறேன்‌, பெருமைப்படுகின்றேன்‌!

மேலும்‌ எனக்கு தொலைப்பேசி வாயிலாகவும்‌, பத்திரிக்கை மூலமாகவும்‌, சமூக வலைத்தளங்கள்‌ வழியாகவும்‌ வாழ்த்துக்கள்‌ தெரிவித்த திரைத்துறையினர்‌, சமூக ஆர்வலர்கள்‌, அரசியல்‌ பெருமக்கள்‌, நண்பர்கள்‌ மற்றும்‌ பண்பலை, ஊடகம்‌, தொலைக்காட்சி அன்பர்களுக்கும்‌, என்‌ நலன்‌ விரும்பிகளுக்கும்‌ என்‌ நெஞ்சார்ந்த வணக்கத்தையும்‌,நன்றியையும்‌ தெரிவித்துக் கொள்கிறேன்‌.

இவ்வாறு தனுஷ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

From around the web