தீபாவளியில் மோதும் தனுஷ்-சிம்பு படங்கள்!

 

தமிழ் சினிமாவின் போட்டியாளர்கள் தனுஷ் மற்றும் சிம்பு ஆகிய இருவர் என்பது தெரிந்ததே. இருவரும் திரைப்படங்கள் ரிலீஸ் ஆகும்போது அந்தந்த நடிகர்களின் ரசிகர்கள் மிகப்பெரிய திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் கடந்த சில வருடங்களாக சிம்பு போட்டியிலிருந்து விலகியது போல் தெரிந்தது. அவரது படங்கள் தொடர்ச்சியாக தோல்வி அடைந்தும் இரண்டு வருடங்களுக்கு ஒரு படங்கள் மட்டுமே ரிலீஸ் ஆகி வருவதுமாக இருந்ததால் அவருடைய ரசிகர்கள் அதிருப்தியில் இருந்தனர்

இந்த நிலையில் தற்போது மீண்டும் சிம்பு புதிய உற்சாகத்துடன் களமிறங்கியுள்ளார். அவர் நடித்து முடித்துள்ள ஈஸ்வரன் படத்தின் டிரைலர் வரும் தீபாவளி அன்று வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது 

simbu dhanush

இந்த நிலையில் தீபாவளிக்கு சிம்புவின் ஈஸ்வரன் களமிறங்கியுள்ள நிலையில் தனுஷூம் போட்டியாக களம் இறங்கி உள்ளார். தனுஷ் நடித்து முடித்துள்ள ஜகமே தந்திரம் என்ற திரைப்படத்தின் வீடியோ பாடல் ஒன்று நவம்பர் 13ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது . எனவே இந்த ஆண்டு தீபாவளிக்கு தனுஷ் மற்றும் சிம்பு படங்களின் ட்ரெய்லர் மற்றும் வீடியோ பாடல் போட்டியாக வெளியாக உள்ளதால் இருதரப்பு ரசிகர்களும் உற்சாகத்தில் உள்ளனர்.


 

From around the web