தனுஷ்-செல்வராகவன் படத்தை ரிஸ்க் எடுக்கும் தாணு!

 
தனுஷ்-செல்வராகவன் படத்தை ரிஸ்க் எடுக்கும் தாணு!

நடிகர் தனுஷின் படத்தை தயாரிக்க பல முன்னணி தயாரிப்பாளர்கள் போட்டி போட்டுக் கொண்டு இருக்கின்றனர் என்றாலும் தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்க உள்ள படத்தை தயாரிப்பதற்கு எந்த தயாரிப்பாளரும் முன்வரவில்லை என்று கூறப்படுகிறது 

குறிப்பாக தனுஷின் சொந்த பேனரில் கூட அந்த படத்தை தயாரிக்க விரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கும் படத்தை தயாரிக்கிறார் கலைப்புலி எஸ் தாணு முன்வந்துள்ளதாகவும் இதற்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது

dhanush selva

தனுஷின் அசுரன் உள்பட ஒருசில வெற்றிப்படங்களை தயாரித்த தாணு இந்த படத்திற்காக ரிஸ்க் எடுக்கிறார் என்று கோலிவுட் திரையுலகம் கூறுகின்றனர் 

இந்த நிலையில் தனுஷ், செல்வராகவன் படத்திற்கு இசையமைக்க ஷான் ரோல்டன் அவர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாகவும் பாடல்கள் கம்போஸ் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன

From around the web