தனுஷ்-செல்வராகவன் இணையும் படம் இதுதான்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

 

தனுஷ் மற்றும் செல்வராகவன் மீண்டும் இணைந்து ஒரு படத்தில் பணிபுரியவுள்ளதாக செய்திகள் கடந்த் சில வாரங்களாக வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது

கார்த்தி, ஆண்ட்ரியா, ரியாசென், பார்த்திபன் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையமைப்பில் உருவான திரைப்படம் ’ஆயிரத்தில் ஒருவன்’. கடந்த 2010-ஆம் ஆண்டு இந்த படம் வெளியான நிலையில் சரியாக 10 ஆண்டுகள் கழித்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் அறிவிப்பு வெளியாகி உள்ளது 

dhanush

இயக்குனர் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த படத்தின் அறிவிப்பை வெளியிட்டதோடு, இந்த படத்தின் நாயகனாக தனுஷ் நடிப்பார் என்றும் குறிப்பிட்டு உள்ளார். எனவே ’ஆயிரத்தில் ஒருவன்’ இரண்டாம் பாகத்தில் கார்த்தி பதிலாக தனுஷ் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது

மேலும் இந்த படம் 2024 ஆம் ஆண்டு திரைக்கு வரும் என்றும் இந்த ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களை உற்சாகப்படுத்த உள்ளது என்றும் தனுஷூம் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். 
 


 


 

From around the web