யாத்ரா, லிங்காவுடன் மொட்டை மாடியில் விளையாடும் தனுஷ்!

கொரோனா வைரஸ் லாக்டவுன் நேரத்தில் நடிகைகள் ஒரு பக்கம் சமூக வலைதளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவு செய்வதில் பிசியாக இருந்தாலும் நடிகர்கள் வழக்கம்போல் அமைதியாக உள்ளனர். பழைய திரைப்படங்களை பார்த்து கொண்டும் அடுத்த படத்திற்கான கதை விவாதத்தில் கலந்து கொண்டும் உள்ளனர் இந்த நிலையில் தமிழ் திரையுலகில் குடும்பத்தை கூட கவனிக்க முடியாமல் பிஸியாக இருந்த நடிகர்களில் ஒருவர் தனுஷ். இவர் கடந்த நான்கு மாதங்களாக முழுக்க முழுக்க சினிமா துறையையே மறந்துவிட்டு குடும்பத்தினருடன் பொழுதை கழித்து
 

யாத்ரா, லிங்காவுடன் மொட்டை மாடியில் விளையாடும் தனுஷ்!

கொரோனா வைரஸ் லாக்டவுன் நேரத்தில் நடிகைகள் ஒரு பக்கம் சமூக வலைதளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவு செய்வதில் பிசியாக இருந்தாலும் நடிகர்கள் வழக்கம்போல் அமைதியாக உள்ளனர். பழைய திரைப்படங்களை பார்த்து கொண்டும் அடுத்த படத்திற்கான கதை விவாதத்தில் கலந்து கொண்டும் உள்ளனர்

இந்த நிலையில் தமிழ் திரையுலகில் குடும்பத்தை கூட கவனிக்க முடியாமல் பிஸியாக இருந்த நடிகர்களில் ஒருவர் தனுஷ். இவர் கடந்த நான்கு மாதங்களாக முழுக்க முழுக்க சினிமா துறையையே மறந்துவிட்டு குடும்பத்தினருடன் பொழுதை கழித்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது

இந்த நிலையில் தனுஷ் தனது வீட்டின் மொட்டை மாடியில் மகன் யாத்ரா மற்றும் லிங்கா உடன் விளையாடும் புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்க்கும் போதுதான் தனுஷுக்கு இவ்வளவு பெரிய மகனா? என்று நெட்டிசன்கள் ஆச்சரியத்தில் கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

தனுஷ் ஏற்கனவே ‘ஜகமே தந்திரம்’ கர்ணன்’ ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். அவர் நடிக்கும் திரைப்படங்கள் வரிசையாக ஆறு படங்கள் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியவுடன் தனுஷ் மீண்டும் பிசியாகிவிடுவார் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web