தனுஷின் திடீர் மனமாற்றம்: அதிர்ச்சியில் தயாரிப்பாளர்!

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ’ஜகமே தந்திரம்’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி விட்டது. ஆனால் திரையரங்குகள் இன்னும் திறக்கப்படாத காரணத்தினால் ரிலீஸ் செய்ய முடியவில்லை. இதனையடுத்து இந்த படம் ஒரு ஓடிடியில் ரிலீசாக இருப்பதாகவும் இது குறித்த பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்தது மேலும் ஓடிடியில் இந்த படத்தை ரிலீஸ் செய்வதற்கு தனக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை என்று தனுஷ் கூறியதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் திடீர் திருப்பமாக தனுஷ் ’ஜகமே தந்திரம்’ தயாரிப்பாளரிடம்
 

தனுஷின் திடீர் மனமாற்றம்: அதிர்ச்சியில் தயாரிப்பாளர்!

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ’ஜகமே தந்திரம்’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி விட்டது. ஆனால் திரையரங்குகள் இன்னும் திறக்கப்படாத காரணத்தினால் ரிலீஸ் செய்ய முடியவில்லை. இதனையடுத்து இந்த படம் ஒரு ஓடிடியில் ரிலீசாக இருப்பதாகவும் இது குறித்த பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்தது

மேலும் ஓடிடியில் இந்த படத்தை ரிலீஸ் செய்வதற்கு தனக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை என்று தனுஷ் கூறியதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் திடீர் திருப்பமாக தனுஷ் ’ஜகமே தந்திரம்’ தயாரிப்பாளரிடம் இந்த படத்தை ஓடிடியில் திரையிட வேண்டாம் என்றும், கொஞ்சம் பொறுங்கள் திரையரங்குகள் திறந்தவுடன் ரிலீஸ் செய்து கொள்ளலாம் என்றும் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளது

தனுஷின் அடுத்தடுத்த படங்களை தயாரித்து கொண்டிருக்கும் தயாரிப்பாளர்கள் தனுசுடன் இதுகுறித்து பேசியதாகவும் ’ஜகமே தந்திரம்’ஓடிடியில் ரிலீசானால் அடுத்ததாக தங்களுடைய திரைப்படங்களுக்கு திரையரங்கு உரிமையாளர்களால் பிரச்சனை வரும் என்று கூறியதால் தனுஷ் திடீரென மனமாற்றமாகி தயாரிப்பாளருக்கு முட்டுக்கட்டை போட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் அதே நேரத்தில் ‘சூரரை போற்று’ திரைப்படம் சூர்யாவே தயாரிப்பாளர் என்பதால் தான் திரையரங்கு உரிமையாளர்களுக்கு கோபம், ’ஜகமே தந்திரம்’ ஓடிடியில் ரிலீஸானால் தனுஷுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்றும் கோலிவுட் திரையுலகினர் தெரிவித்து வருகின்றனர்.

From around the web