தனுஷின் 43 வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

தனுஷ் நடித்த அசுரன், ’பட்டாஸ்’ ஆகிய திரைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் அவர் நடித்து முடித்துள்ள ’சுருளி’ என்ற திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. அது மட்டுமன்றி தனுஷ் தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘கர்ணன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் இந்த நிலையில் தனுஷின் 43வது திரைப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது. இந்த படத்தை இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கவுள்ளார். ஏற்கனவே ’துருவங்கள்
 
தனுஷின் 43 வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

தனுஷ் நடித்த அசுரன், ’பட்டாஸ்’ ஆகிய திரைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் அவர் நடித்து முடித்துள்ள ’சுருளி’ என்ற திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. அது மட்டுமன்றி தனுஷ் தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘கர்ணன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்

இந்த நிலையில் தனுஷின் 43வது திரைப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது. இந்த படத்தை இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கவுள்ளார். ஏற்கனவே ’துருவங்கள் பதினாறு’ ’நரகாசுரன்’ மற்றும் ’மாபியா’ ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

தனுஷுடன் கார்த்திக் நரேன் இணையும் இந்தப் படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் ஜிவி பிரகாஷ் இந்த படத்துக்கு இசையமைக்க உள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

From around the web