விரைவில் தனுஷ் படம் திரையில்.. இந்த பொங்கல் செம ட்ரீட் தான் போல!
தனுஷின் ஜகமே தந்திரம் திரைப்படமும் விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது
Mon, 11 Jan 2021

நடிகர் தனுஷ் தற்போது இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் புதிய திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார், இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சமிபத்தில் தான் ஆரம்பிக்கப்பட்டது.
மேலும் இதற்கு முன் தனுஷ் மாரி செல்வராஜ் உடன் கர்ணன், மற்றும் பாலிவுட் திரைப்படமான அத்ராங்கி ரே என்ற திரைப்படங்களையும் முடித்திருந்தார் தனுஷ்.
இந்நிலையில் மாஸ்டர், ஈஸ்வரன் என இரண்டு திரைப்படங்களும் நீண்ட நாட்களுக்கு பிறகு திரையரங்கில் வெளியாகவுள்ளதால், தனுஷின் ஜகமே தந்திரம் திரைப்படமும் விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.
ஆம் வரும் பிப்ரவரி மாதம் தனுஷின் ஜகமே தந்திரம் திரைப்படம் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது, இதனால் நடிகர் தனுஷின் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.