தனுஷின் ‘பட்டாஸ்’ ரிலீஸ் தேதியில் மாற்றம்!

தனுஷ் நடித்த பட்டாஸ் திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முற்றிலும் முடிவடைந்து வரும் 16ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது தெரிந்ததே. சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் டிரைலர் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதால், இந்த திரைப்படமும் நல்ல வெற்றியைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது இந்த நிலையில் சற்று முன்னர் இந்த படத்திற்கு ’யூ’ சான்றிதழ் கிடைத்துள்ளதாக தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். அதுமட்டுமின்றி ஜனவரி 15ஆம் தேதியே என்ற திரைப்படம் வெளியாகும்
 
தனுஷின் ‘பட்டாஸ்’ ரிலீஸ் தேதியில் மாற்றம்!

தனுஷ் நடித்த பட்டாஸ் திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முற்றிலும் முடிவடைந்து வரும் 16ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது தெரிந்ததே. சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் டிரைலர் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதால், இந்த திரைப்படமும் நல்ல வெற்றியைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் சற்று முன்னர் இந்த படத்திற்கு ’யூ’ சான்றிதழ் கிடைத்துள்ளதாக தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். அதுமட்டுமின்றி ஜனவரி 15ஆம் தேதியே என்ற திரைப்படம் வெளியாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 16ஆம் தேதி தான் ‘பட்டாஸ்’ திரைப்படம் வெளியாகும் என தனுஷ் ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் தற்போது ஒரு நாள் முன்னரே ரிலீஸாவது அவர்களுக்கு இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தனுஷ், சினேகா, மெஹ்ரின் பிர்ஜதா, ஜெகபதிபாபு, முனிஸ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ள இந்த படம் விவேக்-மெர்வின் இசையில் ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவில் பிரகாஷ்பாபு படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது

From around the web