மாரி செல்வராஜ் படம் முடிந்த கையோடு அடுத்த படத்திற்கு தயாரான தனுஷ்... அட இயக்குநர் இவரா?

நடிகர் தனுஷ் கார்த்திக் நரேன் இயக்கத்தில் D43 படத்தில் நடிக்க தயாராகிவிட்டார்.

 

நடிகர் தனுஷ் தற்போது தமிழில் சினிமாவின் மிக முக்கிய நடிகராக உள்ளார், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து இந்தியளவில் கவனம் ஈர்த்து வருகிறது.

மேலும் இவர் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் திரைப்படத்தில் நடித்து முடித்தார், அதனை தொடர்ந்து அத்ராங்கி ரே என்ற பாலிவுட் படத்தில் நடித்து முடித்து விட்டார்.

இந்நிலையில் தனது அடுத்த படத்திற்கு தயாராகி உள்ள நடிகர் தனுஷ் தற்போது இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் D43 படத்தில் நடிக்கவுள்ளார்.

மேலும் தற்போது இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது, இதில் தனுஷ், மாளவிகா மோகனன், ஜி.வி.பிரகாஷ்குமார், கார்த்திக் நரேன் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.


 

null


 

From around the web