மாஸ்டர் படத்தை பார்க்க ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த தனுஷ்!

 

தளபதி விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் வரும் 13ஆம் தேதி வெளியாகவிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்தப் படத்தை திரையரங்குகளில் பார்க்க விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் மிகுந்த ஆவலுடன் இருக்கின்றனர்

கடந்த இரண்டு மாதங்களாக திரையரங்குகள் திறக்கப்பட்டு இருந்தும் திரையரங்குகளுக்கு கூட்டம் வருவதில்லை என்றும் மாஸ்டர் திரைப்படத்திற்குப் பின்னர் தான் திரையரங்குக்கு ரசிகர்கள் வரும் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது 

dhanush

இந்த நிலையில் நடிகர் தனுஷ் தனது டுவிட்டரில் மாஸ்டர் படத்தை அனைவரும் திரையரங்குகளில் பார்த்து, மீண்டும் திரையரங்குகளில் படம் பார்க்கும் கலாச்சாரத்தை துவங்கி வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார் 

மாஸ்டர் திரைப்படம் ஜனவரி 13-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி என்றும் அனைவரும் திரையரங்குகளில் சென்று இந்த படத்தை பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் பார்க்க வேண்டும் என்றும் அதனால் மீண்டும் திரையரங்குகள்  கூட்டம் அதிகம் வரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

தனுஷின் இந்த வேண்டுகோளை அடுத்து பல திரையரங்கு உரிமையாளர்கள் தனுஷூக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.


 

From around the web