மாஸ்டர் ரிலீசை எதிர்நோக்கி காத்திருக்கும் தனுஷ், விக்ரம் ரசிகர்கள்!

 

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் வரும் 13ஆம் தேதி வெளியாக உள்ளது என்பது தெரிந்ததே 

இந்த நிலையில் இந்த படம் சுமார் 800 திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக இருப்பதாகவும் இதுவரை இல்லாத வகையில் இந்த படம் தமிழ் தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் கிட்டத்தட்ட ஒரே நாளில் திரையரங்குகளில் வெளியாகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது 

vikram

இந்த நிலையில் மாஸ்டர் திரைப்படத்தின் ரிலீஸ் தினத்தை விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி விக்ரம் மற்றும் தனுஷ் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அதற்கு காரணம் என்னவெனில் மாஸ்டர் படத்தின் இடைவேளையின் போது விக்ரம் நடித்த ’கோப்ரா’ மற்றும் தனுஷ் நடித்த ’ஜகமே தந்திரம்’ ஆகிய திரைப்படங்களின் டிரெய்லர்கள் வெளியிடப்படுகிறது என்று தகவல் வெளிவந்துள்ளது

இதனை அடுத்து மாஸ்டர் திரைப்படத்தை கான விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி தனுஷ் மற்றும் விக்ரம் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் உள்ளனர் குறிப்பிடத்தக்கது

From around the web