தமிழ் சினிமாவில் தன்ஷிகாவிற்கு நேர்ந்த பரிதாப நிலை... அப்படி என்ன நடந்தது தெரியுமா?
லாபம் படம் மூலம் விஜய் சேதுபதியும், ஸ்ருதி ஹாசனும் முதல்முறையாக ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர். ஹீரோயினாக நடிக்க ஆசைப்பட்டு வந்த சாய் தன்ஷிகாவின் கெரியரில் பெரிய முன்னேற்றம் இல்லை.

இந்நிலையில் அவர் வில்லி கதாபாத்திரமாக இருந்தாலும் சரி நடிக்கிறேன் என்கிறதால் லாபம் படத்தில் பயங்கரமான வில்லியாக நடித்திருக்கிறாராம். கபாலி படத்தில் ரஜினியின் மகள் யோகியாக சாய் தன்ஷிகா நடித்ததை யாராலும் மறக்க முடியாது.
தமிழ் பேசத் தெரியும், நன்றாக நடிக்கத் தெரியும், அப்படி இருந்து தன்ஷிகாவின் கெரியர் ஏன் பிக்கப் ஆகவில்லை என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். தமிழ் தெரிந்த நடிகைகளால் கோலிவுட்டில் முன்னேற முடியாது என்று சில நடிகைகளே முன்பு தெரிவித்தனர். ஒரு வேளை தன்ஷிகாவின் கெரியரில் மாற்றம் ஏற்படாததற்கும் அது தான் காரணமோ என்கிற கேள்வி எழுந்துள்ளது.
லாபம் படத்தில் தன்ஷிகா வில்லியாக நடித்துள்ளார் என்கிற தகவல் அறிந்த ரசிகர்கள், ரஜினி மகளாக நடித்து அசத்தியவருக்கே இந்த பரிதாப நிலையா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.