‘பாகுபலி சிவகாமி’ படத்தை மூன்று பாகங்களாக்கும் ராஜமெளலி

பிரபல இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய பாகுபலி, பாகுபலி 2 ஆகிய இரண்டு படங்களில் பிரபாஸ் கேரக்டரை விட அதிக புகழ் பெற்ற கேரக்டர்கள் இரண்டு. ஒன்று ரம்யாகிருஷ்ணன் நடித்த சிவகாமி கேரக்டர் மற்றொன்று சத்யராஜ் நடித்த கட்டப்பா கேரக்டர். இந்த இரண்டு கேரக்டர்களுக்கும் ரசிகர்கள் கொடுத்த வரவேற்பை அடுத்த இந்த கேரக்டர்களையும் மையமாக வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க இயக்குனர் ராஜமெளலி திட்டமிட்டுள்ளார். மூன்று பாகங்களாக உருவாகவுள்ள இந்த படம் நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்காக உருவாக்கப்படுவதாகவும், அந்த செயலியில்
 

‘பாகுபலி சிவகாமி’ படத்தை மூன்று பாகங்களாக்கும் ராஜமெளலி

பிரபல இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய பாகுபலி, பாகுபலி 2 ஆகிய இரண்டு படங்களில் பிரபாஸ் கேரக்டரை விட அதிக புகழ் பெற்ற கேரக்டர்கள் இரண்டு. ஒன்று ரம்யாகிருஷ்ணன் நடித்த சிவகாமி கேரக்டர் மற்றொன்று சத்யராஜ் நடித்த கட்டப்பா கேரக்டர். இந்த இரண்டு கேரக்டர்களுக்கும் ரசிகர்கள் கொடுத்த வரவேற்பை அடுத்த இந்த கேரக்டர்களையும் மையமாக வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க இயக்குனர் ராஜமெளலி திட்டமிட்டுள்ளார்.

மூன்று பாகங்களாக உருவாகவுள்ள இந்த படம் நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்காக உருவாக்கப்படுவதாகவும், அந்த செயலியில் இந்த படம் தொடராக வெளிவரவிருபப்தாகவும் கூறபடுகிறது.

‘பாகுபலி சிவகாமி’ படத்தை மூன்று பாகங்களாக்கும் ராஜமெளலிசிவகாமி மற்றும் கட்டப்பா கேரக்டர்களில் ஏற்கனவே நடித்த ரம்யாகிருஷ்ணன், சத்யராஜ் நடிக்கவுள்ளதாகவும், இந்த படத்தில் சிவகாமியின் சிறுவயது சாகசம், திருமணம், அவர் சிறுவயதில் சந்தித்த போர் ஆகியவையும் அவருக்கு உறுதுணையாக கட்டப்பா எப்படி இருந்தார் என்பதும் குறித்த கதைதான் இந்த படம் என்றும் கூறப்படுகிறது.

இந்த படத்தை ராஜமெளலி மேற்பார்வையில் தேவகட்டா என்ற இயக்குனர் இயக்கவுள்ளார். இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு மிக விரைவில் வெளியாகவுள்ளது.

From around the web