குப்பை தொட்டியில் வீசப்பட்ட பாலாவின் படத்திற்கு கிடைத்த விமோசனம்

 

பிரபல இயக்குனர் பாலா இயக்கிய ’வர்மா’ திரைப்படத்தை பார்த்த விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் அந்த படத்தை ரிலீஸ் செய்ய வேண்டாம் என முடிவு செய்ததாகவும் இதனை அடுத்து அந்த படம் கிட்டத்தட்ட குப்பை தொட்டியில் வீசப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது

அதன் பின்னர் அதே படத்தை மீண்டும் கிரிசய்யா என்பவரின் இயக்கத்தில் உருவாக்கி அந்த படம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியானது. ஆதித்ய வர்மா என்ற டைட்டிலில் வெளியான இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும் துருவ் விக்ரமின் நடிப்பு பெரிதாக பேசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது 
இந்த நிலையில் அர்ஜூன் ரெட்டியின் ரீமேக் படத்தை இயக்கியுள்ள பாலாவின் ’வர்மா’ எப்படி இருக்கிறது என்பதைப் பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் இருப்பதாக சமூகவலைதளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டது. இதனை அடுத்து ’வர்மா’ படம் ஓடிடியில் ரிலீஸ் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக கடந்த சில வாரங்களாக தகவல்கள் வெளிவந்தது 

இதனை அடுத்து தற்போது இந்த படம் அக்டோபர் 6ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது, துருவ் விக்ரம், ஷாலினி பாண்டே நடித்துள்ள இந்த படத்தில் இந்த படம் எப்படி இருக்கும் என்பதை அக்டோபர் 6ஆம் தேதி பார்த்து தெரிந்துகொள்வோம்

From around the web