ஹிஸ்ட்ரியை டெலிட் செய்யுங்கள்: ரசிகர்களுக்கு சிம்பு அறிவுரை?

 

நடிகர் சிம்பு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் எந்த அளவுக்கு சோம்பேறியாகவும் படக்குழுவினர்களின் அதிருப்தியையும் சம்பாதித்து கொண்டாரோ அதே அளவுக்கு தற்போது சுறுசுறுப்பாகவும், வருடத்துக்கு இரண்டு அல்லது மூன்று படங்களும் கொடுக்கும் அளவிற்கு விறுவிறுப்பாகவும் செயல்பட்டு வருகிறார் 

ஏற்கனவே சிம்பு நடித்து முடித்துள்ள ஈஸ்வரன் திரைப்படம் பொங்கல் தினத்தில் வெளியாக உள்ள நிலையில் மாநாடு திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த திரைப்படம் ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது 

simbu

இந்த நிலையில் மீண்டும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் சிம்பு அவ்வப்போது தனது ரசிகர்களுக்கு அறிவுரையையும் சமூக விழிப்புணர்ச்சியையும் தனது படங்கள் குறித்த தகவல்களையும் தெரிவித்து வருகிறார் 

அந்த வகையில் தற்போது அவர் பதிவு செய்துள்ள ஒரு புகைப்படத்தில் டி-ஷர்ட் ஒன்றை அணிந்திருந்த நிலையில் அந்த டீசர்ட்டில் ’ஹிஸ்டரியை டெலிட் செய்யுங்கள், சாதனையை நிகழ்த்துங்கள்’ என்று கூறியுள்ளார் 

இதனை அடுத்து சிம்புவின் ரசிகர்கள் இந்த புகைப்படத்திற்கு ஜாலியான மற்றும் ஆக்கபூர்வமான கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web