வாத்தி கம்மிங் பாடலுக்கு அசத்தலான வீடியோ வெளியிட்ட தீபிகா படுகோன்...

பாலிவுட்டின் டாப் ஹீரோயினான தீபிகா படுகோன் தற்போது தளபதி விஜய்யின் வாத்தி கம்மிங் பாடலுக்கு அசத்தலான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
 
வாத்தி கம்மிங் பாடலுக்கு அசத்தலான வீடியோ வெளியிட்ட தீபிகா படுகோன்...

நடிகர் விஜய் கடைசியாக நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். 

ஏப்ரம் மாதம் வெளியாகவிருந்த மாஸ்டர் திரைப்படம், ஊரடங்கு காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மாஸ்டர் ஜனவரி 13 பொங்கல் அன்று திரையரங்குகளில் நேரடியாக வெளியானது. அதே போல் மிகவும் நலிவுற்றிருந்த திரையரங்குகள் மற்றும் அதன் சார்ந்த தொழில்களை மாஸ்டர் மீண்டும் உயிர் பெற செய்துவிட்டது என்றே சொல்லலாம். மேலும் மக்கள் மதத்திலும் நல்ல வரவேற்பை பெற்றது.

அதிலும் மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள 'வாத்தி கம்மிங்' பாடல் மிகவும் பிரபலம். அனிருத் இசையமைத்த இப்பாடல் ரிலீஸூக்கு முன்னரே ரசிகர்களை வெகுவாக கவர்ந்து சூப்பர் ஹிட் அடித்தது. பல பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மாஸ்டரின்  வாத்தி கம்மிங் பாடலுக்கு அந்த பிரத்தியேக ஸ்டெப் போட்டு வெளியிட்ட வீடியோக்கள் பலவும் வைரலானது. 

இந்நிலையில் பாலிவுட்டின் டாப் ஹீரோயினான தீபிகா படுகோன் தற்போது தளபதி விஜய்யின் வாத்தி கம்மிங் பாடலுக்கு அசத்தலான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த தளபதி ரசிகர்கள் குஷியாகி கமெண்ட் செய்து வருகின்றனர்.

From around the web