அஜித்-சுதா கொங்காரா படத்தில் தீபிகா படுகோன்?

 

அஜித் நடித்து வரும் வலிமை படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் உள்ளது என்பது தெரிந்ததே. அனேகமாக ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்திற்குள் இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து விடும் இதனை அடுத்து சுதா கொங்கரா இயக்கத்தில் அஜீத் ஒரு படத்தில் நடிக்க உள்ளார் என்பதும் அந்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் தேர்வு தற்போது நடைபெற்று வருவதாகவும் முதல் கட்டமாக அஜீத் ஜோடியாக நடிக்க தீபிகா படுகோன் நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும், இதற்காக இயக்குனர் சுதாவின் உதவியாளர்கள் தீபிகாவுடன் பேச்சுவார்த்தை நடத்த மும்பை சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது 

deepika1

அஜித் மற்றும் சுதா இணையும் படத்தில் நாயகிக்கு மிகவும் முக்கியத்துவம் உள்ள கேரக்டர் என்பதால் இந்தியா முழுவதும் பிரபலமான ஒரு நடிகையை தேர்வு செய்ய வேண்டும் என்பதில் சுதா கொங்கரா உறுதியாக உள்ளார் என்று கூறப்படுகிறது

From around the web