தீபிகா படுகோனே நடிக்கும் அடுத்த தமிழ் படம் அறிவிப்பு: சம்பளம் ரூ.20 கோடியா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கோச்சடையான் என்ற தமிழ் திரைப்படத்தில் பாலிவுட் பிரபல நடிகை தீபிகா படுகோனே நடித்தார் என்பது தெரிந்ததே. இந்த திரைப்படம் அனிமேஷன் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் தமிழ் உள்பட 5 மொழிகளில் தயாராக உள்ள திரைப்படத்தில் தீபிகா படுகோனே நடிக்க ஒப்பந்தமாகி உள்ள தகவல் தற்போது வெளிவந்துள்ளது பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடிக்கும் 21வது திரைப்படத்தை நாக் அஸ்வின் என்பவர் இயக்க உள்ளார். இவர் ஏற்கனவே ’நடிகையர் திலகம்’
 

தீபிகா படுகோனே நடிக்கும் அடுத்த தமிழ் படம் அறிவிப்பு: சம்பளம் ரூ.20 கோடியா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கோச்சடையான் என்ற தமிழ் திரைப்படத்தில் பாலிவுட் பிரபல நடிகை தீபிகா படுகோனே நடித்தார் என்பது தெரிந்ததே. இந்த திரைப்படம் அனிமேஷன் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தமிழ் உள்பட 5 மொழிகளில் தயாராக உள்ள திரைப்படத்தில் தீபிகா படுகோனே நடிக்க ஒப்பந்தமாகி உள்ள தகவல் தற்போது வெளிவந்துள்ளது

பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடிக்கும் 21வது திரைப்படத்தை நாக் அஸ்வின் என்பவர் இயக்க உள்ளார். இவர் ஏற்கனவே ’நடிகையர் திலகம்’ உள்பட ஒருசில படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் பிரபாஸ் ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்திற்காக தீபிகாவுக்கு சுமார் 20 கோடி ரூபாய் வரை சம்பளம் பேசப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. பிரபாஸ் ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்க இருக்கும் தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருவதோடு டுவிட்டர் டிரெண்டில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web