சோம்சேகர் செல்லமாக வளர்த்த ‘குட்டு’ மரணம்: ஆரி வாய்வச்சது நடந்தே போச்சே

பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களில் ஒருவராக இருக்கும் சோமசேகர் செல்லமாக வளர்த்து வந்த நாய் திடீரென மரணம் அடைந்து விட்டதாக வெளி வந்துள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
பிக்பாஸ் வீட்டில் கடந்த சில வாரங்களுக்கு முன் நடந்த எந்திரன் டாஸ்க்கில் எந்திரன் ஆக நடிப்பவர்களை மனிதர்களாக நடிப்பவர்கள் கோபப்படுத்த வேண்டும், அழ வைக்க வேண்டும் என்பதுதான் டாஸ்க். அவ்வாறு சோம்சேகர் எந்திரனாக நடித்துக் கொண்டிருந்தபோது அவரை அழவைப்பதற்காக ஆரி பல்வேறு முயற்சிகள் செய்தார்
அப்போது சோம் வீட்டில் செல்லமாக வளர்ந்து வரும் நாய்க்குட்டி குறித்து குறிப்பிட்டு ’செல்லமாக வளர்த்த நாய் குட்டியை விட்டுவிட்டு இங்கே வந்து விட்டாயே, நீ திரும்பி செல்வதற்குள் அந்த நாய்க் குட்டி ’குட்டு’வுக்கு ஏதாவது ஆகிவிட்டால் என்ன செய்வாய்’ என்று கேட்டார். அப்போது சோமசேகர் அதற்கு ஒன்றும் ஆகாது நான் திரும்பும்வரை அது நன்றாக தான் இருக்கும் என்று கூறினார்
இந்த நிலையில் அவர் செல்லமாக வளர்த்த ‘குட்டு’ என்ற அந்த நாய்க்குட்டி தற்போது மரணமடைந்து விட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அந்த நாய்க்குட்டி இறந்த செய்தி சோம்சேகருக்கு இன்னும் தெரிவிக்கப்படவில்லை என்பதும் அவர் வெளியே வந்தவுடன் தான் இந்த அதிர்ச்சி தகவல் அவருக்கு தெரிய வரும் என்பதும் குறிப்பிடத்தக்கது
ஆரி விளையாட்டுக்காக சொன்னது, வாய் வச்சது உண்மையிலேயே நடந்து போச்சு என்று ஆரியை பிடிக்காத ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இது குறித்து பதிவு செய்து வருகின்றனர்