சின்னத்திரை காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி மரணம்: அதிர்ச்சி தகவல்

சின்னத்திரை காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி உடல்நலக்குறைவால் மரணமடைந்துள்ளார். அவருக்கு வயது 45.

 

சின்னத்திரை காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி உடல்நலக்குறைவால் மரணமடைந்துள்ளார். அவருக்கு வயது 45.

கலக்க போறது யாரு என்ற் சின்னத்திரை நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த வடிவேல் பாலாஜி, ‘கோலமாவு கோகிலா’ உள்பட ஒருசில திரைப்படங்களிலும் காமெடி நடிகராக நடித்துள்ளார். மேலும் ‘அது இது எது’ உள்பட ஒருசில நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்து கொண்டார்

இந்த நிலையில் வடிவேல் பாலாஜி கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் திடீர் மாரடைப்பு காரணமாக இரு கைகளும் வாதம் ஏற்பட்டு முடங்கி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்த நிலையில் தொடர் சிகிச்சைக்குப் பின்னர் போதிய வசதி இல்லாத காரணத்தால் அரசு மருத்துவமனைக்கு வடிவேல் பாலாஜி மாற்றப்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் சிகிச்சையின் பலனின்றி சற்றுமுன் அவரது உயிர் பிரிந்தது. மரணம் அடைந்த நடிகர் வடிவேலு பாலாஜிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web