கிழக்கே போகும் ரயில் படத்தின் ஒளிப்பதிவாளர் மரணம்

கிழக்கே போகும் ரயில் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய நிவாஸ் இன்று காலமானதாக கூறியுள்ளார்.
 

சின்னத்திரையில் பெரும் நட்சத்திர அந்தஸ்து கொண்ட நடிகையாக திகழ்ந்து வரும் ராதிகா தற்போது சித்தி 2 சீரியலில் நடித்து வருகிறார். பல வருடங்களாக தொடர்ந்து சீரியல்களை தயாரித்து வரும் குடும்பம் பேர குழந்தைகள் என இருந்து வருகிறார்.

தற்போது தன் கணவர் சரத்குமாருடன் இணைந்து அரசியல் பணிகளை கவனித்து வருகிறார். இதற்காக தமிழகம் முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். சேலத்தில் ஹோட்டலில் இருந்த படியே கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு வீடியோ கால் செய்து பேசி மகிழ்ந்த அவர் தற்போது சோக பதிவு ஒன்று இட்டு இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதில் தன்னுடைய முதல் படமான கிழக்கே போகும் ரயில் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய நிவாஸ் இன்று காலமானதாக கூறியுள்ளார். நிவாஸ் மலையாளம், தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் பணியாற்றியுள்ள அவர் இயக்குனராக கல்லுக்குள் ஈரம், எனக்காக காத்திரு, நிழல் தேடும் நெஞ்சங்கள், செவ்வந்தி படங்களை இயக்கியுள்ளார்.

16 வயதினிலே, சிகப்பு ரோஜாக்கள், எங்க ஊரு மாப்பிள்ளை, கோழி கூவுது, புதிய வார்ப்புகள், நிறம் மாறாத பூக்கள் ஆகிய முக்கிய படங்களில் அவர் பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

From around the web